புதன், 4 ஜனவரி, 2012

இரண்டு வருடங்கள்


கொழும்புக்கு வந்து  கிட்டத்தட்ட இரண்டு வருசமா போயிடுது. யோசிச்சு பார்த்தால் தான் விளங்குத்து நாங்களும்,காலமும் எப்பிடி மாறிப் போயிட்டம் எண்டு.

இரண்டு  வருசத்துக்கு முதல் A/L   எடுத்திட்டு  கொழும்புக்கு வரேக்கிள்ள  எல்லா நண்பர்களும் அப்ப தான் இங்கால பக்கம் எட்டி பார்த்தாங்கள். கொழும்பு எண்டா அவங்களுக்கு வெள்ளவத்தைதான் அப்ப.  அந்த காலத்தில எல்லாம்  ஒரு குரூப்பா திரிஞ்சாத்தான் தான் மரியாதை. ஒண்டு ரெண்டு எண்டு இல்லாமல் ஒரு வகுப்பே ஏதோ அசம்பிளியிக்கு போற மாதிரி ஒண்டா வெள்ளவத்தை முழுவதும் சுத்தி திரிஞ்சு கொண்டு இருந்தம், அப்ப எல்லாம் எங்களுக்கு NOLIMIT தான் பெரிய உடுப்பு கடை. அங்க உடுப்பு வாங்கினால்
ஏதோ LEVIS ல வாங்கின மாதிரி பீத்திக் கொண்டு திரிஞ்சோம். அங்க ஊடுப்பு வாங்கிட்டு வெளிய வந்தால் நம்மள மாதிரியே அதே உடுப்போட ஒரு பத்து பதினஞ்ச்சாவது திரியும்,, அப்ப அது FASHION எண்டு  நினச்சித்து போனோம்...


அப்ப தனியா  திரிஞ்சா பெரிய அவமானம். PONDS எண்டு சொல்லுவாங்கள்... இப்பிடியே ஊரில காஞ்சு போன சரக்குகளை பார்த்திட்டு இங்க  கொழும்பு  சரக்குகளை  பார்த்திதது  வாய் பிளந்து போய் னின்றோம்...சிலர் தங்கள் முன்னால் சப்பை சரக்குகளை கழற்றியும் விட்டனர்....FAIR AND HANDSOME ,,,, GILLETE SHAVING GELL,,HAIR GELL,,,,,, எண்டு வாங்கி பூசி மெழுகி கொண்டு திரிஞ்சம்...

பின்னேரம் எண்டா beachல   நிப்போம்,,, ஸூக்கு போனோம், மீயூசியமிற்கு போனோம், காப்டன் படத்துக்கு கூட குரூப்பாதான் போனோம் . FACEBOOK ல தீயா வேலை செய்தோம்...FAKE GIRL REQUESTஸ்  எல்லாம்அக்ஸப்ட் பண்ணி சட் பண்ணி நண்பர்களிடம் ஏமாந்தோம்........


இப்பிடியே ஒரு நாலு மாசம் போயிட்டு.....

அவரவர் ஒவ்வொரு கோர்ஸ்க்கு பதிஞ்சு, வகுப்புகளுக்கு போக தொடங்கினோம்,,, அப்ப நம்ம இன நண்பர்களுடணும், சில நண்பிகள் உடனும் சேர தொடங்கிண்ம்,,, பிறகு நம்ம ஒரிஜினல்  செட் சிறுக தொடங்கியது,,,, பலர் வெளிநாட்டுக்கு ஓடினர்,,,,, எங்கட MEETING குறைய தொடங்கியது......... முன்னம் எல்லாம் நாங்கள் CONFERENCE CALL போட்டு வெட்டியா இரவு முழுதும்(ONLY BOYS ) அலம்புவோம்... இப்ப அது வெறும் CALL ஆகியது,,,,,,1000 MINUTES முடியாமல் இருக்க தொடங்கியது......




கிட்டத்தட்ட ஒரு வருசம்........


கிட்டத்தட்ட நம்ம ஒரிஜினல் டீம் பிரிஞ்சு வேற வேற டீமா போயிட்டுது,,,, தற்செயலா பழைய நண்பர்களை கண்டால்,  ஒரே பிசி தான் மச்சான், அசைன்மண்ட்  வேர்க் எண்டு சும்மா சீன் போட்டுக்கொண்டோம்....

இந்த காலப்பகுதியில் சிலருக்கு சரக்கு செட் ஆகியும் போச்சு.,... அவங்கள் உயிரோட இருக்கிறாங்களா இல்லயா எண்டு யாருக்குமே தெரியாத மாதிரி தொடர்புகளை துண்தடிச்சு விட்டிட்டாங்கள்....

எங்கள மாதிரி ஆக்களோ எங்களுக்கும் ஒண்டு மாட்டாதா எண்டு ஏங்கி கொண்டு இருந்தோம்....
அது ஒரு இருண்ட யுகம்...................



இப்ப இரண்டு வருசம் முடிஞ்சுது .....


எங்க புது நண்பர்களும் இதே மாதிரி தான்.... கிட்ட தாட்ட எல்லாரும் உண்மையிலேயே BUSY ஆகிட்டாங்கள்......சிலர் வேலைக்கு, சிலர் படிப்பு.....
இறைவன் அருளால் அநேகமான நண்பர்களுக்கு ஒரு சப்பை சரக்கவது மாட்டி போட்டுது..... அவங்கள் பாடு படு கொண்டாட்டம் தான்,,,,,, நம்ம மாதிரி ஒரு சிலருக்கு இப்பவும்.... சான்ஸே இல்லை... விதி............................


இப்ப எல்லாம் FACEBOOK பக்கம் பெரும்பாலானோர் தலை வைச்சு படுக்கிறததும் இல்லை.. இப்ப எல்லாம் FREINDSச திரிஞ்சா பெரிய அவமானம் .
பார் இப்பவும் பெடியங்களோடயே சுத்திக்கொண்டு இருக்கிறான் எண்டு நக்கல் அடிக்கும் சமூகம்.... ஒண்டு தனியா திரியனும்... இல்ல லவர் கூட திரியனும் எண்டு போச்சு......

 நண்பர்களை காண்பதே படு கஸ்டம்... அப்பிடி கண்டாலும் பெரிசா கதை இருக்காது,,, அப்பிடி கதைசாலும்  TEAMA திரியாமாட்டோம்.......  
இப்ப எல்லாம் எங்களுக்கு இது தான் பிரைச்சினை
EXAM ASSIGNMENT,PROJECT, WORK ,,, LOVE..................................................




இப்போ மறுபடியும் பார்கிரேன் இரண்டு வருடத்திற்கு முந்தின ,,, அந்த ரகளை,சேட்டை, சந்தோசம்,,,,,இளமை,,,, நண்பர்கள்......எதுவுமே இப்ப இல்ல. இப்ப எல்லோரும்   SERIOUS SERIOUS SERIOUS    !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



அடுத்த வருசம் நிச்சயம் இன்னும் மாறி போயிடுவம்.....
ஆனால் ஒண்டும் செய்ய முடியாது..................
வாழ்க்கைக்கு ஏற்ப மாறித்தான் போகணும்....
   




but we cant loss our friendship ever............................................................... it is a green memory ever!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!