ஞாயிறு, 20 ஜூன், 2010

திகில் ரயில் பயணம்!




வெள்ளவத்தையில் அண்மைக்காலமாக கலகலப்புடன் சுற்றி திரியும் அர்ஜீன்,பட்டு, சுரேஷ், ஆனந்தநேசன், ஜனா-குறு,தனஞ்சி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம், சில தினங்களிட்கு முன்னர், வெள்ளவத்தை பீச்சில், சோகமே உருவாக அமர்ந்து இருந்தனர்! கடலை வெறித்துப் பார்த்தபடி மௌனமாக, என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த அவர்களின் மௌனத்தை அவ வழியே கடந்து சென்ற ரயிலின் கொடூர சத்தம் கலைக்கவே,அவர்கள் சுய நினைவிற்கு வந்தனர்! கொழும்பின் அத்தனை முக்கிய இடங்களையும் சுற்றி ஒரு ரவுன்ட் அடித்துவிட்ட அவர்கள், வேறு எங்கு போகலாம் என்று நினைத்துகொண்டிருக்க, அந்த ரயில் இவர்களிட்கு, எதோ செய்தியை சொல்லாமல் சொல்லிய படி சென்றது! இவர்கள் இது வரை ரயிலில் ஏறியதில்லை ஆதலால்," ஒரு சேஞ்சிற்கு ரயிலில் ஒருக்கா போயி பார்ப்போமா?" என்று பட்டு ஆர்வ மிகுதியில் கத்த, " அட, முன்னம் பின்னம் எங்களில் யாராவது, ரயிலில் போயிருக்கிறோமா? விஷயம் தெரியாமல் போயி வம்பில மாடிறதா?" என்று தனஞ்சி, இராஜதந்திரமாக சொல்ல, அனைவரும் அதை ஆமோதித்தனர்! அதுவரை பொறுமையாக இருந்த அர்ஜீன் வெகுண்டெளுந்து " அடங் கொய்யால! இது பெரிய விசயமா? நான் அந்தக் காலத்தில ஸ்கூல் இற்கு ரயிலில தான் போறனான்! ரயிலில போறது எனக்கு வாக்கிங் போற மாதிரி!, பயப்படாமல் வாங்கோ, நான் கூட்டிட்டு போறான்! " என்று புரூடா விட, நடக்கப்போவதை அறியாத அந்த அப்பாவி நண்பர்கள் அனைவரும் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கினர்!(வெள்ளவத்தை கடலில் அல்ல).

இப்படியே பேசிய படி, ஐந்து ரூபாவிற்கு வாங்கிய கடலையை " எள்ளானாலும் ஏழாய் பிரித்து உண்ண‌ வேண்டும்" என்ற திருவள்ளுவரின்(?) கூற்றிற்கு அமைய கடலையை உண்டனர்! இப்படியே, இருட்டுப்பட, நேவிக்காரன் போக்கஸ் லைட்டை பீச்சி அடிக்க, அனைவரும், வெடிச்சத்தம் கேட்ட கழுதைகளைப் போல ஓடத்துவங்க, அன்றைய மீட்டிங் இனிதே நிறைவிற்கு வந்தது!

திட்டம் இடப்பட்டபடி போர்ட் இற்கு சென்று ரயில் ஏறுவதாக அனைவரும் ஒத்துக்கொண்டனர்! அப்போது ஜனா‍‍‍குரு " அங்க போயி ரயில் ஏறுவது அலுப்பு பிடிச்ச வேலை, பேசாமல், பீச்சில நின்று, கையக் கால காட்டி மறிச்சு ஏறுவோம்! கண்டக்ட்டர் பேசினால் பேசட்டும், நாங்க வாங்காத பேச்சா! " என்று கூற, அனைவரிட்கும், அது ஒரு நல்ல ஜோசனையாக பட்டது! அனைவரும் ஜனாவை புகழ‌, மிகவும் வெட்கப்பட்ட ஜனா " சீ! போங்கள்!" என்று கூற, கொஞ்சம் சயன்டிபிக்கா ஜோசித்த சுரேஷ் " அட, பஸ்சில தான் அப்படி ஏறலாம், ரயிலில அப்படி ஏற முடியாது என்று கூற, ஆனந்தநேசனும் தன பங்கிற்கு " ஓமோம் இப்ப ரூல்ஸ மாத்திட்டான்கள், சுரேஷ் சொன்னது தான் கரக்ட்! " என்றான்! பட்டுவும் "அட, நான் நேற்று நியூஸ் பேப்பர் பார்க்கைல்லை, அதில சில வேலை இந்த நியூஸ் வந்து இருக்கும்!" என்று ஆதங்கப்பட்டார்! அப்போதுதான் வேகப் பந்து வீச்சாளர் சுமந்திரன், இந்திய அணியுடனான போட்டியை முடித்துக்கொண்டு(கொஞ்சம் ஓவரா போயிட்டுதோ? ஸ்கூல்லையே, இவன் பந்து போடுறன் என்று ஐந்து நிமிடங்களாக தலையை சுழட்டு சுழட்டு என்று சுழற்றி விட்டு, பந்து போட்டதும்,இவன் வீசும் பந்து பட்ஸ்மனை நோக்கி போகுதோ இல்லையோ, லெக் அம்பயரிற்கு படக்கூடாத இடத்தில் பட்டதும் இதுவரை முறியடிக்கப்படாத இவனது சாதனைகள்) இவர்களுடன் பயணத்தை தொடங்கினான்!

எப்படியோ, போர்ட் இற்கு சென்று ஸ்டேசனிற்கும் சென்று விட்டார்கள்! அங்கே பிளட்போமில் பல ரயில்களை கண்டதும் இவர்களால் தமது சந்தோசத்தை அடக்கிக்கொள்ள முடியவில்லை! தமது சந்தோசத்தை இனிப்பு பரிமாறி தெரிவித்துக்கொண்டனர்! தனஞ்சியன் கண்களில் இருந்து, தாரை தாரையாக கண்ணீர் ஊற்றியது! பல ரயில்கள் இருந்தபடியால் குத்துமதிப்பாக அழகான பெண்கள் இருந்த ரயிலில் ஏறி ஒருவாறு அமர்ந்து கொண்டனர்! அருகில் ஒரு தமிழ் பெண்மணியும் இருந்தார்! இவர்களின் நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டிருந்த அப்பெண்மணிக்கு அர்ஜீன் தலைமையிலான, அணியினரை பார்க்க, பரமார்த்த குருவும் சீடர்களும் கதை நினைவிற்கு வர, ஒரே ஜாலியாக போய்விட்டது! சக பயணிகளும், இவர்களை ஒரு மார்க்கமாக பார்க்க இவர்களிட்கு நடக்க போகும் விபரீதம் தெரியாமல் செம ஜாலியாக, அமர்ந்து இருந்தனர்!


ரயிலும் புறப்பட துவங்கியது! ரயில் பின்புறமாக நகர்வதை பார்த்த நண்பர்கள், பதறத் தொடங்கினர்! ஆனந்தநேசனோ " பதறாதீங்க பிளீஸ்! இப்ப டிரைவர் ரிவர்ஸ் எடுக்கிறார், கொஞ்சம் பொறுங்க!" என்று பொறுப்புடன் கூற, அருகில் இருந்த பெண்மணியால் சிரிப்பை அடக்க முடியாது சிரிக்க துவங்கினார்! அருகில் இருந்த பெண் தன்னை பார்த்து தான் சிரிப்பதாக, சுமந்திரன் சொல்ல இல்லை என்னைப் பார்த்து தான் என்று ஜனா சொல்ல, வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது! உடனே அப்பெண் தலையிட்டு, "நான் உங்கள் எல்லோரையும் பார்த்துத்தான் சிரித்தேன் என்று கூறி அமைதிப்படுத்தினார்! ரயில் வேகமாக பற‌ந்து கண்டே இருந்த்தது!


சரி, அடுத்த ஸ்டேஷன் வெள்ளவத்தைதான் என்று கூறிய படி, அர்ஜீன் இறங்குவதற்கு ஆயத்தமானார்! இதை பார்த்துக்கொண்டிருந்தவர்களால் ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை! போர்டில் இருந்து வெள்ளவத்தை இவ்வளவு தூரமா? என்று தமக்குள்ளேயே எண்ணத்துவங்கினர்! ஜன்னல் வழியே எட்டிப்பார்த்த பொது, அப்பகுதியில் "மருதானை" என்று எழுதி இருந்த்தது! இது என்ன புது ஊரா இருக்குது? வெள்ளவத்தைக்கு போற வழியில, இப்படி ஒரு ஊரே இல்லையே? என்று பதறிய‌போதும், சிலவேளை வழமையான, ரூட்டில ட்ராபிக் சாமா இருக்கும் அது தான், டிரைவர் ஷர்ட்-கட்டால விட்டு எடுக்கிறார் போல என்று ஆசுவாசப்படுத்திக்கொண்டனர்!

இதே வேளை, தனக்கு நெட்வர்க் இஞ்சிநியரின்க் கிளாஸ் இருப்பதை உணர்ந்த பட்டு, உரத்த குரலில் "இசர கோல்ட் பயினவா!" என்று கத்த அந்த கம்பார்ட்மண்டே சிரிக்கத்தொடங்கியது!! பட்டுவும், வடிவேலை போல "ஏன் இப்படி சிரிக்கிறாங்கள்?" என்று ஜோசித்துக்கொள்ள, நிலைமையை உணர்ந்த்த தனஞ்சி பட்டுவை அழைத்து, " அழகான பொண்ணுங்க முன்னாடி மானத்தை வாங்காத‌, பஸ்சில போகயிக்கில தான் அப்படி சொல்லுவாங்கள், ரயிலில போகும் பொது இசர ஸ்டேஷன் எண்டு தான் கூற வேண்டும்,எண்டு சொல்ல இதை மிஷ்டர் பீன் படம் பார்ப்பது போல பார்த்துக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் விசில் அடித்தும், கை தட்டியும் தமது ஆரவாரத்தை தெரிவித்துக்கொண்டனர்! அருகில் இருந்த பெண்ண விழுந்து விழுந்து சிரித்தார்! அப்படி விழுந்து விழுந்து சிரித்தமையால், சிறிது காயமும் ஏட்படவே செய்தது!


ஒரு வழியாக ரயில் தனது கடைசி ஸ்டேஷனில் நின்றது! அனைத்து பயணிகளும் இவர்களை ஒரு மார்க்கமாக பார்த்தபடியே இறங்கினர்! இவர்களோ இன்னும் வெள்ளவத்தை வராதபடியால், இறங்காமல்,அப்படியே இருந்தனர்! என்னதான் இருந்தாலும் ரயிலை விட பஸ் தான் வேகம் கூட, கேவலம் இங்க இருந்து வெள்ளவத்தைக்கு போக மூண்டு மணித்தியாலம் எடுக்குது! பஸ்சில எண்டால் அரை மணித்தியாலம் காணும்! இந்த டிரைவருக்கு அவ்வளவு வண்டி ஓட்டத்தெரியாது போல என்று பொரிந்து தள்ளினர்! இப்படியே மேலும்,சுமார் அரை மணி நேரம் பொறுத‌திருந்தனர்! " பொறுத்தார் பூமி ஆழ்வார்" என்று தன நண்பர்களை அர்ஜீன் தேற்றியபடி இருந்தார்! இவர்களை பார்த்து சந்தேகம் கொண்ட போலிஸ் இவர்களை பார்த்து சிங்களத்தில் கண்மூடித்தனமாக பேச, சிங்களம் தெரியாத இவர்கள் குத்துமதிப்பாக கோரசாக " வெள்ளவத்தை பயிணவா!" என்று கூற, போலீசும் இவர்களின் பரிதாப நிலையை எண்ணி அழத்தொவங்கிவிட்டார்! பிறகு ஒரு மாதிரி அழுகையை நிறுத்திவிட்டு " தம்பிங்களா! நீங்க வெள்ளவத்தைக்கு போக வேண்டுமெண்டால், மற்ற‌ப்பக்கத்தில நிண்டு ஏறி இருக்க வேண்டும்! இப்ப பார்த்தீங்களா, அனுராதபுரத்திட்கு வந்திட்டீங்கள்!" என்று சொல்ல, "அநுராதபுரமா ஆ அ? என்றபடியே சுமந்திரன் மயக்கமடைந்தார்! அனைவரும் அர்ஜீனை தகாத மொழிகளில் அர்ச்சித்த படியே, அந்த போலிசின் உதவியுடன் சரியான ரயிலில் ஏறி தமது வெள்ளவத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தனர்! இந்த முறையாவது சரியப் போக வேண்டும்,என்று குல தெய்வத்தை பிரார்த்தித்தபடியே பயணத்தை தொடங்கினர்! போகிற வழியில் அர்ஜீன் நண்பர்களை பார்த்து " இந்த டீலிங் நமக்குள்ளேயே இருக்கட்டும்! " என்று கேட்டுக்கொள்ள அனைவரும் ஏற்றுக்கொண்டு மறுதினம் வெள்ளவத்தையை அடைந்தனர்!

யாவும் கற்பனை அல்ல‌!

சனி, 19 ஜூன், 2010

சாதனை நண்பர்கள்!



அண்மைய காலமாக பேஸ்புக்கின் மார்க்கட் வீழ்ச்சி அடைந்து விடுமோ என்று ஒரே கவலைப்பட்டுக்கொண்டிருந்த நமது நண்பர்களின் நெஞ்சில் பால் வார்த்தால் போல் சென் ஜோன்ஸ் கல்லூரியின் 2008 கணித பிரிவு மாணவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கியிருப்பது அண்மைய செய்தித்தாள்களில் முக்கிய செய்தியாக இடம்பிடித்து உள்ளது! இவர்களின் இந்த முன்னோடியான செயற்பாடுகள் உலகின் அத்தனை பேஸ்புக் பாவனையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாக‌வும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன!

யார் இவர்கள் என்ற எதிர்பார்ப்பு உங்களிற்கு இருக்கும் ! வெள்ளவத்தையில் அண்மைய காலமாக சுற்றி திரியும் "நரேன் குரூப்" என அழைக்கபடும் அர்ஜீண் தலைமையிலான , பிரசாந்த்(பட்டு), பிரபல பாடகர் குருநாதரின் தவப் புதல்வன் ஜனா-குரு, காட்டுக்கந்தோர் ஒழுங்கை தனஞ்சி, டேஞ்சர் சுறையா, இவர்களின் அரசியல் ஆலோசகர் ஆனந்தநேசன், ஆகியோரும் இவர்களிட்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் எட்வின் லெஸ்லீ ஆகியோரே இந்த அணியினர்! அண்மைக்காலமாக பேஸ்புக்கை ஓபன் பண்ணினால் போதும் நூறு நோடிபிகேஸன்கள், பத்து பிரண்ட்ஸ் ரிக்குயஸ்ட் என்று ஒரே களேபரமாக இருக்கிறது பேஸ்புக்! அகா! பத்தில ஒரு ரிக்குயஸ்டாவது தெரிஞ்ச பெண்கள் எவருடையதாக இருக்க வேண்டும் என்று அத்தனை தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு, மனம் பதைபதைக்க பார்த்தால், என்ன கண்றாவி! இவர்களின் முகம் தான் Requestஇல் இருக்கும்! அந்தக் கடுப்பில் requestஐ ignore பண்ணிட்டு, notificationஐ பார்த்தால், எதோ ஒரு போட்டோவில் நம்மளை Tag பண்ணிட்டு , வரிசையா கமெண்ட் பண்ணி இருப்பார்கள்!
என்ன தான் இருந்தாலும், பல மாதங்களாக வெறுமையாக இருந்த பலரின் புரோபயில்கள் இவர்களின் வருகையால் புத்துணர்ச்சி பெற்று உள்ளதை மறுக்க முடியாது!


இதே வேளை, வேலையில்லாமல் வெட்டியாக, பேஸ்புக்கிட்கு முன்னாலேயே, ஏதாவது notificationகள் புதுசா வருமா, நாம கமெண்ட் பண்ணலாமா என்று வழி மேல் விழி வைத்து காத்துகிடந்த றொமேஸானந்தா(நித்தியானந்த அல்ல) இவர்களின் வருகையால் புத்தெழுச்சி பெற்றார்! அவரின் மகிழ்விற்கு அளவே இல்லாமல் போய் விட்டது! சந்தோசத்தில் அழுதே விட்டார் என்றால் பாருங்களேன்! அதிலும், அர்ஜீணும், பட்டுவும் என்னமா கவிதை எழுதிறாங்கள்~! எங்கிருந்து தான் இப்படி வருதோ தெரியவில்லை! கேட்டால் "அதுவா வருகிதாம்"! இவர்கள் இருக்கும் வரை தமிழை யாராலும் அழிக்கமுடியாது!(அதுதான் இவங்களே அழிச்சுக்கிறங்களே என்று முட்டாள்தனமா கேட்கக்கூடாது ஆமா!) அசைக்க முடியாது!

அண்மையில் இவர்கள் தெகிவளை மிருக காட்சி சாலைக்கு திடீர் விஜயம் ஒன்றை மேட்கொண்டது,தொல்பொருள் காட்சியகத்திட்கு சென்றது, ராவணன் படம் பார்க்க சென்றது, ரயில் பயணம் சென்றது(இந்த காமெடி நிகழ்ச்சி பற்றி பின்னர் விரிவாக எழுத்தப்படும்) என்று கொழும்பு நகரையே இந்த நட்சத்திரப் பட்டாளம் ஒரு கலக்கு கலக்கி வருகிறது! இந்த அணியில் இடம் பிடிக்க பல நண்பர்கள் தீவிர பயிற்ச்சியில் ஈடுபட்டு உள்ளதாக தகவல்கள் கிடைகின்றன! கடந்த வருடம் இடம்பெற்ற கிரிக்கட் Big Matchசில் சென்ட் ஜோஎன்ஸ் மண் கவ்வியபோதும், "ஓடி பிடித்தல்" பிக் மட்சில்சென் ஜோண்ஸ் அணி மாபெரும் வெற்றி ஈட்டியது நினைவிருக்கலாம்! அந்த அணியில் இவர்கள் இடம் பெற்றிருந்தமையை இவர்கள் நிரூபிக்கும் முகமாக வெள்ளவத்தையில் தினமும் ஓடி பிடித்து விளையாடி வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன! பேஸ்புக்கை பழைய நிலை அடையச்செய்யும் முயட்சிகளில் தளராமல் உழைக்கும் இவர்கள் நிமித்தம் சென் ஜோன்ஸ் மட்டுமல்ல இலங்கை மாதவே பெருமை கொள்கிறது! எமது மண்ணில் இருந்து இப்படி திறமைசாலிகளா? நினைக்கும் போதே அப்படியே புல்லரிக்கிறது!

வாழ்க தமிழ்!

வளர்க உங்கள் சேவை!