புதன், 31 மார்ச், 2010

முக்கிய அறிவித்தல்! " மாயாவி- கவனம்!"

வாசக பெருமக்களே! இந்த வலை தளத்திலே பல எழுத்தாளர்கள் தமது படைப்புக்களை எழுதுகின்றார்கள்! எனவே , சிலருடைய படைப்புக்களால், எமது எழுத்தாளர் ஒருவர் ,தாம் அச்சுருத்தல்களிட்கு ஆளாகலாம் என்ற பயத்தில் இன்று வெள்ளவத்தைக்கு போகும் தனது திட்டத்தை கை விட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன! எனவே, பாதிக்கப்பட்டவர்கள், எம்மை தாக்குவது என்று முடிவு எடுக்கும் முன்னர், அல்லது தாக்குதலின் போது இவர் தானா உண்மையில் எம்மை பற்றி எழுதியது என்பதை உறுதி செய்த பின்னர் தாக்குதலில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்! எமது வலைத்தளத்தில் மாயாவி என்ற பெயரில் எழுதுபவர் காரசாரமாக, கர்ண கொடூரமாக எழுதக்கூடியவர் என்பதால், இவரின் ஆக்கங்களிட்கும், ஏனைய, எழுத்தாலர்களிட்கும் எது வித சம்பந்தமும் இல்லை, என்பதை நாம் உறுதியாக கூறுகின்றோம்!

செவ்வாய், 30 மார்ச், 2010

மாட்டு மாமாவிற்கு ஆப்பு!

அண்மையில் பலர் பற்றிய தகவல்களை இங்கே நாக்கை தொங்கப்போட்டபடி பார்த்துக்கொண்டு காலம் போக்கும் மாட்டை பற்றி எழுதி தள்ளுமாறு எமக்கு கிடைத்த தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்த பதிவு ஆக்கப்படுகிறது!
மாட்டு மாமாவிற்கு இந்த பட்டம் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பது பற்றிய தீவிர ஆராய்ச்சியில் எமது, தொல்பொருள் நிபுணர்கள் குழு, பழைய சென்.ஜோன்ஸ் கல்லூரியின் சிதைந்த்த் தரம் நான்கு, ஐந்து வகுப்பு அறைகளை, தோண்டி அகழ்வாராய்ச்சியில் ஈடு பட்ட போதும் , பயன் தரும் படியான எந்த தடயங்களும் கிடைக்கவில்லை! எனினும், பழைய மாணவர்களின் வாய் மொழி பாரம்பரியங்களின் படி, அப்போதைய மாணாக்கர்களில், உடல் அமைப்பில் பாரிய அளவில் காணப்பட்டமையினாலும், இடைவேளைகளில் டிபன் பாக்ஸ் இல் புண்ணாக்கை கொண்டு வந்து உண்பதாலேயுமே இந்த பெயர் பழக்கமாகியதாகவும், மாமா என்ற சொல் எப்படி இணைக்கப்பட்டது என்பது பற்றி தமக்கு தெரியவில்லை என்றும் கூறுகின்றனர்!
இது தவிர, சென்.ஜோன்ஸ் வரலாற்றில் எமது பிரிவில் முதல் முறையாக மூக்குக் கண்ணாடி அணிந்த பெருமையும் மாட்டு மாமாவையே சாரும்! இதனை பாராட்டி அப்போதைய அசம்பிளியில் கவுரவ டாக்டர் பட்டமும், மாட்டு மாமா பட்டமும் வழங்கி கவுரவிக்கப்பட்டார்! அப்போது தமிழ் படிப்பித்த ரகுநாதன் சார் , அதிகாலையில் எழுந்து உரத்த குரலில் வாசித்தால் குரல் வளம் நன்றாக வரும் என்று கூறியதை கேடு, ஒரு நப்பாசையில்,அதிகாலை எழுந்து உரக்க வாசித்த பொது , அவ்வேளை அவ்வழியால் சென்ற ஆசிரியர் அவர்கள், ஏதோ எருமை மாடு ஒன்று அவிட்டுக்கிட்டு , முக்கார‌மிட்டபடி ஓடி வருவதாக எண்ணி ஓட்டம் பிடித்தமையும் வரலாறாக பதியப்பட்டுள்ளன! திருக்குறள்,அது இது என்று, பரிசில்களை, தட்டி செல்லும், மாடு, ஒரு முறை, பாட்டுப் பாடுவதிலும் பரிசு பெற வேண்டும் என்ற நோக்கில், மேடை ஏறி , பாடுவதாக எண்ணி, முக்கார‌மிட்டதில், அப்போதைய ஹண்டி நூலகம் இடிந்து வீழ்ந்த்ததும், போட்டி நடுவராக கலந்து கொண்ட இந்துமதி மிஸ் மயங்கி வீழ்ந்ததும் இவருடைய வாழ்நாள் சாதனைகள்! தொம்சன் கவுசில், எந்த போட்டியிலும் கலந்து கொள்ளாமல், வெட்டியாக இருந்ததால், கோபம் கொண்ட தவராஜா மிஸ் "எருமை மாடு! போய் கயிறு இழுவையாவது செய் என்று " திட்டி கயிறு இழுக்க அனுப்பியதும், கயிற்றை பிடித்தது தான் தாமதம், செக்கு இழுப்பது,நினைவிற்கு வர, கயிற்றை பிடித்தபடி, கிரவுண்ட்ஸ்ஐ சுற்றி சுற்றி இழுத்ததும் , அதில் இருந்து இவரிற்கு "செக்கு மாடு" எனும் பெயரும் இணைந்து கொண்டது! தரம் ஐந்திலேயே ரிபோர்ட் இல் கள்ள கையோப்பம் வைத்து பிடிபட்டு, எமது பிரிவில் முதல் முறை கள்ள சயின் வைத்தவன் என்ற பெருமையையும் தன்னகத்தே கொண்டு உலா வருகிறார்! பின்னர் வளர்ந்தது, இங்கிலிஸ் ஜூனியன் பிரசிடன்ட் ஆக வந்து ஊர் உலகத்தில,இருக்கிற பெண்கள் பாடசாலய்களிட்கு எல்லாம் ஆங்கில தினத்திற்கு,கோபி, அஜந்துடன் சென்று சிறப்பித்து உள்ளார்! ஒரு முறை, நித்தியானந்த மக வித்தியாலயத்துக்கு சென்ற பொது, கலவரமடிந்த மாணவர்கள் " எருமை மாடு விழா மண்டபத்துக்குள் நுழைந்து விட்டது" என்று கால் தெறிக்க ஓடி இருக்கிறார்கள்! பின்னர் ஒருவாறு சுதாகரித்துக்கொண்ட, அதிபர் " இது மாடு அல்ல! மனிதன் தான்! பயப்பட வேண்டாம்! என்று கூறியபோதும், ஒரு வித பயத்துடன், விழா நடந்து முடிந்தது!
ஒரு சமயம் காதல் தோல்வியில் பாதிக்கப்பட்டு " பிரம்மச்சாரியாக போவதாக "ஏதோ ஒரு ஆத்மீக அமைப்பில் சேர்ந்தது ஸ்கூல் பிரிபக்ட் போல பட்டி அணிந்து சயன்ஸ் கால் இற்கு சென்று, இங்கு நான் தான் பிரிபக்ட் என்று பீலா விட, அருளரிடம் காதினை பொத்தி வாங்கி இருக்கிறார்! தற்போது கொழும்பில் மேய்ந்து திரியும் இவர் பற்றிய மேலதிக தகவல்கள் விரைவில்!!!!!!!!!!!

நண்பர் சாமி!

அண்மையில் எமது குழுவினர் மிகுந்த உயிர் அச்சுருத்தல்களிட்கும் மத்தியில் பலரை பற்றி எழுதி வீட்டை விடு வெளியேற முடியாமல் மூன்று நாட்களாய் முடங்கி இருந்த வேலையில், கொட்டாஞ்சேனையில் இருந்து ஒரு அழைப்பு வந்தது! சிவ சிவா என்று அலறியடித்துக்கொண்டு ரிசீவ் பண்ணிய பொது , எதிர் முனையில் இருந்து செந்தமிழில்(பச்சைத் தமிழில்) எம்மை அன்புடன் அழைத்தபோது தான் எமது நெஞ்சில் தண்ணீர் வந்தது! அப்படி கொடூரமாக அழைத்ததில் இருந்து அன்னார சாமி தான் என்பதை ஊகிக்கக்கூடியதாக இருந்தது! "என்ன விடயம்" என்று கேட்டபோது, சற்று வெட்கத்துடன் சாமி அவர்கள், "எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?" என்று கேட்டார்! "தினேசை தூக்க வேண்டுமா? நாய்க்குட்டி பிரச்சனை இன்னும் முடியவில்லையா?" என்று நாம் திருப்பி கேட்க," இல்லடா ம்மச்சான்! நான் கொஞ்சம் பேமஸ் ஆஹ வர வேண்டும்! அதுக்கு.....' "அதுக்கு?...." "இல்லடா இப்ப நீங்கள் கொஞ்ச நாளா குட்டி கருப்பன், ஜே.எம் .ஜே, மற்றும் பலரை பற்றி பல விடயங்களை கூறி, பிரபல்யம் ஆக்கிப்போடீன்கள்!, அத மாதிரி என்னை பற்றியும் ஏதாவது கேவலமா எழுதுங்கடா! அப்போ நான் பேமஸ் ஆகிடுவன்!! ஒரு செஞ் இற்கு, சாமி ஒரு ரவுடி அப்பிடி,இப்பிடி ஏதாவது கொஞ்சம் வித்தியாசமாய் ட்ரை பண்ணுங்கடா! பிளீஸ்" என்று கூற, நமது தொலைபேசி முனையில் இருந்து "த்தூ!" எனும் காரசாரமான இரைச்சல்! சாமி அவர்கள் 'என்னடா? ஸ்டேசனில் ஏதாவது தொழில்நுட்ப கோளாறா?" என்று அரக்க பறக்க விசாரிக்க, " இல்லடா ! காரித்துபினனான்கள்!" என்று கூற, சாமிலனிடம் இருந்து இனம் புரியாத வார்த்தைகளை கேட்கக்கூடியதாக இருந்தது! எமது காதில் இருந்து வடிந்த இரத்தத்தை துடைத்தபடி , விடயத்தை thodarnththom! சாமியை சமரசப்ப் படுத்தும் நோக்கில் , டேய் , உன்னை பற்றி என்னத்தை எழுத? டவுநிட்குல ஒருக்கா மோட்டார் சயிக்கிளில் வந்து உன்னை மிரட்டியதை பற்றி, எழுதவா? இல்லை, ஐந்தாம் ஆண்டில் அஜந்த, தக்காளியுடன் அடிபட்டதை எழுதவா? இல்லை ஆறாம் ஆண்டில் முதலும் கடைசி முறையுமாக உன்னால் ஒரு புள்ள பூச்சியை ( மரினோ) அடிக்க முடிந்த்ததே அதை எழுதவா? இல்லை குணம் சார் இன் பாடத்துக்கு செபமாலையை பிடித்து கும்பிட்டபடி இருப்பியாம் அதை பற்றி எழுதவா? இல்லை உன்னை வீடு தேடி வந்து அவ்வவ்போது மிரட்டும் பொடியளை, வீட்டுக்குள் அழைத்து , நெல்லிக்கிரசும் , கொத்து ரொட்டிஉம வாங்கி குடுத்து, உனக்கே உரித்தான பல நகைச்சுவை கதைகளை கூறி கூழ் panni anuppivittu , மறு நாள் emmidam வந்து " டேய், நேற்று அவங்கள் வீட்ட வந்தவங்க, நான் காதை பொத்தி irantu kuduththan , வந்த valiyae ஓடிட்டாங்கள், ஒருவனிற்கு பச்சை மட்டையால் தான் கலைத்துக் கலைத்து குடுத்தன், என்று பீலா vittiyae அதை எழுதவா? இல்லை நண்பர் visu ஒரு முறை "நேற்று எங்க veetitku மேலால போன கிபீர் கோன் adiththu விட்டு ponathu என்று கூற, arukil irunththa nee, " இத விடு எங்கட அப்பா கொழும்பிற்கு பிளேனில போகயிக்கில, எங்கட veetukku மேலால பிளேன் போகயிக்கில, "ஹாய் ! என்று sollittu தான் போனவர் என்று பீலா vitiyae அதை sollavaa? இல்லை senthil நாதன் சார் இன் class ஐ கட் adippathaal, கடுப்பான சார் , ஒரு முறை வீடு தேடி வந்து அம்மாவிடம் கம்பிலையின் பண்ண வர, அதை visu மூலம் அறிந்து கொண்டு , அயிஸ் வைத்து அனுப்பி விட்டு, அவன் என்னோட padikkira பெடியன், physics கோப்பி வாங்க வந்தவன் என்று டுமீல் விடேயே, அதை கூறவா?, இல்லை , ஒரு முறை விசுவுடன் மரினோ, உன்னை பற்றி நொண்டியாக கதைக்கும் பொது உன்னிடம் vasamaaka மாறயபோது, " டேய் அம்மா பாவம், அப்பா பாவம்,......" என்று கென்ச்சக் kenchcha கர்ண கொடூரமாக திடினாயே! அதை எழுதவா ,இப்படி பல கேள்விக்கணைகளை thoduththapothum satrum மனம் thalaraatha சாமி " adoi! நான் ஊருக்கிள ரவுடி எண்டு போம் ஆகிட்டான், thanchi, janakan(kattaippiraai), janakan(maattu maama) ஆனந்தநேசன், sumanthiran, விசு, சிவம், pattu இவங்கள் எல்லாம் அப்படித்தான் நம்புறாங்கள்! அதுக்கு ஏற்ற மாத்ரி எழுத்து! உன்னால முடியாட்டி சொல்லு, நானே எழுதி தாரன்! நீ பப்ளிஷ் பண்ணு!" இன்னொரு விஷயம் " அந்த பதிவிற்கு கீழ வந்து நான் கொடூரமா திட்டிரன், அப்பா தான் இத நான் எழுதினனான் என்று ஒருத்தரும் சந்தேக பட மாட்டாங்கள்! என்ன ஓகேவா?" என்று கூறினான்! அதுமட்டும் இல்லாமல் இன்னொன்றையும் கூறினார், " டேய், விசு மட்டும் கொஞ்சம் சந்தேக படுவான், என்னோட கனகாலமாக சுத்தினதில நம்ம பீலாக்கள் அவனிற்கு பிடிபட்டு போச்சு! ஆனாலும் பிரச்சினை இல்லை! அவன் விடாத பீலாவா நான் விடப்போறன்?"
எமக்கு இதை வெளியிட விருப்பம் இல்லாவிடினும், சாமிழனின் கொலை வெறி தாகுதளிட்கு பயந்தது இதை துரதிஷ்டவசமாக வெளியிடுகின்றோம்!

ஞாயிறு, 28 மார்ச், 2010

குட்டி கருப்பநிட்கு உதவுங்கள்!!!!!!!!!!


அன்பிற்கும் பெரு மதிபிட்கும் உரிய குட்டிக்கருப்பனின் நண்பர்களே! உங்கள் நண்பனை பற்றிய இந்த பதிவிற்கும எனக்கும் எதுவித தொடர்பும் இல்லை!
இது தான் குட்டி கருப்பனின் வாழ்க்கை! வாசியுங்கள்!
ஏ/எல் இல் அபாரமாக பாஸ் பண்ணிய கே.கே(குட்டிக்கருப்பன்) பின்னர் சிறிது காலமாக இன்று போல சும்மாவே சுற்றி திரிந்து கொண்டு இருந்தான்! இதை பார்த்த அவனின் அண்ணா கே.கே(குண்டு கருப்பன்) மிகவும் மனம் உடைந்து A.C.C.A இல் இணைத்து விட்டார்! கே.கே உம சிறப்பாக படித்து ஒருவாறு எக்ஸாம் எழுதி விட்டார்! பின்னர் பேசெபுக் இல் அமர தொடங்கிய கே.கே மிகவும் புத்துணர்ச்சியுடன் நாள் முழுவதும் இருக்க தொடங்கினார்! பாம்வில்லே விளையாட தொடங்கிய அவன் சச்சினை போல பாம்விலே இல் அரிய பல சாதைனைகளுடன் இன்றளவும் முன்னிலையில் உள்ளார்! இது தவிர யூடியூப் இல் பாடல்கள், படங்களை தரவு இறக்குவதில் இவனிக்கு நிகர் இவனின் அண்ணா மட்டுமே! தனது மகனின் அருமை பெருமைகளை கண்டு புல்லரித்துப்போய் இவனின் பெற்றோர்கள் புளகாங்கிதம் அடைந்தனர்! இது தவிர இவனின் குடும்பத்தாரிடம் இருந்தது கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், கின்னஸ் சாதனை படைக்கும் வகையில், இருபத்திநான்கு மணி நேரமும் கால் கதைப்பதாக அறிய வந்தது! எப்போதும் சும்மாவே இருக்கும் கே.கே ஐ பாராட்டி அண்மையில் ஒஸ்கார் விருது வழங்கப்பட்டது! அந்த விருதை பெற்று கொண்டு உரை ஆற்றிய கே.கே வானத்தை அண்ணாந்து பார்த்து " எல்லாப் புகழும் இறைவநிட்கே" என்று KOORINAAR! இதனால் உலகம் முழுவதிலும் தமிழின் புகழ் கோடி கட்டி பறக்கிறது! இந்த விருதை பெற்ற கே.கே , நியூ யார்க் டைம்ஸ் இற்கு அளித்த பேட்டியில் " சும்மா இருப்பது எவளவு கடினம் என்பது எனக்கு மட்டுமே தெரியும்!" என்றார்!.A.C.C.A. எக்ஸாம் எடுக்காது பெற்றோரை ஏமாற்றி திரியும் இவன், எப்போது அடுத்த எக்ஸாம் என்று கேட்டதற்கு" ஜனவரி, பிப்ரவரி,.... டிசம்பர்' என்று அணைத்து மாதங்களையும் கூறியஇவன், இதற்கு மேலும் கூறுவதற்கு மாதமே இல்லாத படியால் நிறுத்திவிட்டான்! சரி இவனின் தினசரி நேர அட்டவனையை பார்ப்போமா?
அதிகாலை நித்திரை விடு எழுவது ஒன்பதரை மணிக்கு! பின்னர் நேரடியாக டி.வீ இல் டி.வீ.டி இல் கண்டி வரை கேட்கும் அளவிற்கு கதறக் கதற பாட்டு கேட்பான்! அதில் ஒரு கிளுகிளுப்பு அவனிக்கு! அம்மா பேசும் மட்டும் கேட்டு விட்டு , பின்னர் முகம் கழுவாமல், பல் துலக்காமல் தண்டச்சோறு உண்பான்! இது முடிய , நேரடியாக முழு உற்சாகத்துடன் கம்பியூட்டர் நோக்கி சென்று, பேஸ்புக் இல் அமர்ந்தது தன்னை போல வெட்டியானவர்களுடன் சங்கத்து அரட்டையை ஆரம்பிப்பான்! இடையில் அகப்படும், அக்ஷய் நாதன் ஐ வம்பிற்கு இழுத்து பன்னிரண்டு மணி வரை காலம் கடத்துவான்! பின்னர் மட்டவர்களின் புரோபயில்களை கிண்டி கிளறி, அங்கே தன தடயங்களை பொரித்து விட்டு, பின்னர் பாம்வில்லே ஐ மூர்க்கத்தனமாக மூச்சு திணறத் திணற விளையாடுவான்! பின்னர் மறுபடி மத்யம் உண்டு விட்டு , மறுபடி,பேஸ்புக், பின் டின்னர், பின் மறுபடி பேஸ்புக்! இவை அனைத்தும் முடிந்த்த பின்னர் வெற்றிகரமாக தனது நாளை களித்த மன நிறைவுடன் , ஒரு வித வெற்றி களிப்புடன் ஒரு அபாரமான தூக்கம்! சக்சஸ் என்று கூறியபடி! இது தான் வெட்டி பயல்களின் வாழ்க்கை ! இதை வைத்து , தேசிய விருது பெரும் நோக்கில் இயக்குனர் பாலா படம் ஒன்று தயாரிக்கின்றார்! இதில் நடிக்கும் படி கேட்டதற்கு," நான் இப்போது சும்மாவே இருப்பதால் இதில் நடிக்க நேரம் இல்லை '"என்று கூறி இருக்கின்றன்!



எனவே குட்டிக்கருப்பனின் ஆண், பெண்ண நண்பர்களே! தயவு பண்ணி உங்கள் லவ் பிரைச்சினைகள், இன்னோரன்ன பிரைச்சினைகளிட்காக கே.கே ஐ இழுத்து அவனின் வாழ்கையை வீணடிக்காது, அடிக்கடி கால் பண்ணி படிக்க விடாமல் குழப்பாமல் இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்! பதிலாகA.C.C.A எக்ஸாம் எடுக்க அட்வைஸ் பண்ணி உங்கள் நண்பனை உட்சாகப்படுத்துங்கள்! பேஸ்புக் இல் அரட்டை அடிப்பதை நிருத்துன்க்கள்!

சனி, 27 மார்ச், 2010

மோட்டார் சைக்கிள் வாங்கிய kathai

நண்பர் ஒருவரிற்கு மோட்டார் சைக்கிள் வாங்கி ஓடி எப்படியாவது தான் சயிட்அடிக்கும் பெண்ணை மடக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. ஆனாலும் அவன் அப்பனோ வாங்கி கொடுக்க மாட்டேன் என்றிட்டான்! நண்பர் சாதாரண ஆளே கிடையாது! ரொம்ப கெட்டிக்காரன்! நல்லா பிளான் பண்ணி செய்வான்! அதனால் ஒரு நல்ல திட்டம் ஒன்று தீட்டினான்! உடனேயே தன அம்மாவிடம் சென்று , " அம்மா அம்மா ! என்னால வெளியே தலை காட்ட முடியவில்லை! இனிமேல் நான் வெளியில் செல்ல முடியாது!" என்று அழத் தொடங்கினான்! அதை பார்த்து கவலை அடைந்த தாய் , " ஏன் என்ன நடந்ததது?" என்று கேட்டல். அதற்கு அவன் " அம்மா! அம்மா! மூன்று சில்லு சைக்கிளையே ஆறாம் ஆண்டில் ஓடி பழகிய கோபி, மானிப்பாயில் காற்று அடித்தால் மன்னாரில் போய் விழும் சயன் கூட பல்சர் ஓடுறாங்க! நான் மட்டும் லுமாலசைக்கிளை அலுக்க அலுக்க ஓடி திரியிறன்! ரோட்டில ஸ்கூட்டியில் போற பெண்கள் எல்லாம் காரித்துபிறாங்க" "என்றான். உடனேயே அம்மா ," கோபி, சயன் பல்சர் ஓடுவது பல்சர் கம்பெனி காரங்களிட்கு தெரியுமா? தெரிந்தால் கம்பனியை மூடிட்டு போயிட மாட்டாங்களா? என்று kettaar. அதற்கு அவன் " அது தான் சொல்லுறன், அவங்க கம்பெனியா மூடிட்டு போயிடுரத்துக்கில பல்சர் வாங்கி தாங்க அம்மா!" என்றான். அதற்கு அம்மா தயங்கியபடி, " வாங்கி தருவது ஒன்னும் பெரிய பிரச்சினை இல்லை! கோபி, சயன் எல்லாம் பல்சர் ஓடுறாங்கள் என்று கேள்விப்படும் போது கட்டாயம் பல்சர் தான் வாங்க வேண்டுமா என்று யோசிக்கிறேன், பேசாமல் "150" வாங்கித்தாறன் என்று 150 ௦வாங்கி குடுத்தாச்சு! அப்புறம் ஒரு நாள் கோபி, சயன் இருவரும் நண்பர் வீடிற்கு போய் இருகிறாங்கள்! அப்போ நண்பரின் அம்மா " எங்க உங்க பல்சர்? ஏன் லேடீஸ் சைக்கிளில டபிள்ஸ் வந்து இருக்கிறீங்கள்? " என்று கேட்க இருவரும் ஒன்றுமே விளங்காமல் மூச்சு திணறி இருகிறாங்கள் ! அப்புறம் தான் புரிஞ்சது நண்பர் பீலா விட்டிருக்கிறான் என்று! பிறகு நண்பரின் அம்மா " இப்படி இவன் கூறும் pothu என்னால் நம்பவே முடியவில்லை! நான் அப்படியே shoked ஆயிட்டான்!".
தாங்கள் பல்சர் ஓடினால் எப்படி இருக்கும் என்று இருவரும் சற்று நேரம் பொறுமையாக உட்கார்ந்து ஜோசித்து பார்த்தாங்க! அப்புறம் மூச்சு திணற திணற சிரிக்க ஆரம்பிச்சிட்டான்கள்! இந்த கதை வெளியில் லீக் ஆஹா , இத கேள்விப்பட்டு, நண்பர் அரவிந்த் அதர்ச்சியில் கோமா நிலைகுத்தள்ளப்பட்டார். aananth, பல்சர் ஓடுவதை அறவே நிறுத்திவிட்டார்! அது சரி, 150 வாங்கிய நண்பர்ஜே. எம்.ஜே இப்பொது ௧௫0 மேல் ஏறி உட்கார்ந்தது இருக்க அவனின் அப்பா 150 ஐ பின்னால் தள்ளிக்கொண்டு திரிகிறாராம்! ஏன் என்றால் நண்பரிட்கு மோட்டார் சைக்கிள் ஓடவே தெரியாதாம்!

நண்பர் ஒருவரின் கதை!

நேற்று ஆபீஸ் வேலை முடித்து களைப்பில் இருந்த போது நண்பர் ஒருவரின் கால் ! என்னடா என்று அரக்க பறக்க ரிசீவ் பண்ணியபோது , எதிர் முனையில் இருந்து நண்பர் கலங்கிய குரலில், நண்பா நான் ஒரு பெண்ணை எப்படியாவது காதலிப்பது என்று நண்பர்களிடம் சவால் விட்டு இருகிறேன், நீ தான் ஏதாவது ஐடியா தர வேண்டும் என்று கெஞ்சினான் . மேலும் தன்னை பார்த்து நண்பர்கள் " நீ இந்த மேட்டர் இற்கு சரிவர மாட்டாய் என்று நக்கல் அடிபதால் தான் இந்த முடிவிற்கு வந்தததாக கூறினான்! இது என்ன ஒரு சோதனை, அவன் மட்டும் சாதாரண மனிதனாக இருந்தால் சும்மா 1000 ஐடியா கொடுத்து இருபேன்.பயலிட்கு வயது இருபது ஆகியும் மீசை arumpavae இல்லை! பார்க்க இப்ப தான் ச்கொலர்ஷிப் கிளாஸ் இற்கு சபேசன் சார் இட்ட போறவன் மாதிரி இருக்கிறான்! என்னை வேற எதோ மதிச்சு ஐடியா கேட்கிறான், நம்ம staetas iyum வேற keep பண்ணனும், என்ன செய்யலாம் என்று உட்கார்ந்து யோசித்ததில் அருமையான ஐடியா கிடைத்தது! payal வேறு நிமிடத்துக்கு இரண்டு தடவை call பண்ணி ஐடியா rediyaa? ஐடியா ரெடியா என்று டார்ச்சர் பண்ணிக்கொண்டு இருந்தான்! அப்பபோ மிஸ்ட் கால் வேற! ஒரு மாத்ரி ஒரு மிஸ்ட் கால் லை பாய்ந்து ரிசீவ் சொன்னான்! ஐடியா வை சொன்னேன் ! " அட இது தான் ஐடியா! இப்போ உன் வீட்டுக்கு பக்கத்தில தவண்டு கொண்டு இருக்கிற ரீமா வை இப்போதைக்கு சைட் அடி! உன் சைஸ் இற்கு அது தான் சரி! அப்புறமா ஒரு ௨0 வருடம் கழிந்து, இப்போ நீ பின்னால திரிய "போடா பொடிப்பயலே என்று திட்டிய சினேகா கிழவியா போயிடும், அப்புறம் தினேஷ் அவளை விட்டு வேற ஒருத்தியை பார்க்க, அந்த கேப் இல நீ உன் லவ் வை சொல்லிடு!" என்று சொன்னேன்!
சொல்லி முடிச்சது தான் தாமதம், பயல் என்னை பாராட்டு, பாராட்டு என்று பாராட்டியே கொண்டிட்டான்! இப்போ எல்லாம் நண்பர் ரிமோட் கார் உம, பீ பீ குழலும் வாங்கி ஐஸ் வைக்கிரதிலியே முனைப்பாய் இருக்கிறான்! நண்பர் பெயரை சொல்லத்தான் ஆர்வமாய் இருக்கிறது! என்றாலும் சரிஇல்லை! நண்பர் இதை பார்த்தால் ரொம்ப வேதனைப்படுவார்!

ஐ.பீ.எல்.

நடை பெற்று வரும் ௨0-௨0 போட்டிகளில் எதிர்பார்ப்புகளிட்கு ஏமாற்றமாய் முன்னணி வீரர்கள் சொதப்பி வருவது ரசிகர்களிட்கு வெறுப்பை அளித்து உள்ளது. சனத், தில்ஷன், கங்குலி,அதிகம் எதிபார்க்கப்பட்ட பொல்லார்ட் என்று கோட்டை விட பொறுமையாய் ஆடி சச்சின் ரன் குவிக்க, மன்கூசுடன் ஹய்டேன் பெரிதஹா அசத்த முடியாமல் இருக்க பதான் சஹோதரர்கள் அசத்தி வருகிறார்கள். மறுபுறம் கொழுப்பு கூடிய சங்கா தலைமை, பட்டிங் இரண்டிலும் சோடை போக, அவரால் ஒதுக்கப்பட்ட வாஸ்,முரளி ஆகியோர் நக்கலாக சிரிக்கிறார்கள். சனத் மட்டும் அடித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.ஆனாலும் என்ன தான் இருந்தாலும் ௨0-௨0 என்பது திறமையானவர்களின் போட்டி என்று சொல்ல முடியாது. கண்மூடித்தனமாக நொறுக்கும் முரடர்களின் சொர்க்காபுரி! அவ்வளவே!