ஞாயிறு, 28 மார்ச், 2010

குட்டி கருப்பநிட்கு உதவுங்கள்!!!!!!!!!!


அன்பிற்கும் பெரு மதிபிட்கும் உரிய குட்டிக்கருப்பனின் நண்பர்களே! உங்கள் நண்பனை பற்றிய இந்த பதிவிற்கும எனக்கும் எதுவித தொடர்பும் இல்லை!
இது தான் குட்டி கருப்பனின் வாழ்க்கை! வாசியுங்கள்!
ஏ/எல் இல் அபாரமாக பாஸ் பண்ணிய கே.கே(குட்டிக்கருப்பன்) பின்னர் சிறிது காலமாக இன்று போல சும்மாவே சுற்றி திரிந்து கொண்டு இருந்தான்! இதை பார்த்த அவனின் அண்ணா கே.கே(குண்டு கருப்பன்) மிகவும் மனம் உடைந்து A.C.C.A இல் இணைத்து விட்டார்! கே.கே உம சிறப்பாக படித்து ஒருவாறு எக்ஸாம் எழுதி விட்டார்! பின்னர் பேசெபுக் இல் அமர தொடங்கிய கே.கே மிகவும் புத்துணர்ச்சியுடன் நாள் முழுவதும் இருக்க தொடங்கினார்! பாம்வில்லே விளையாட தொடங்கிய அவன் சச்சினை போல பாம்விலே இல் அரிய பல சாதைனைகளுடன் இன்றளவும் முன்னிலையில் உள்ளார்! இது தவிர யூடியூப் இல் பாடல்கள், படங்களை தரவு இறக்குவதில் இவனிக்கு நிகர் இவனின் அண்ணா மட்டுமே! தனது மகனின் அருமை பெருமைகளை கண்டு புல்லரித்துப்போய் இவனின் பெற்றோர்கள் புளகாங்கிதம் அடைந்தனர்! இது தவிர இவனின் குடும்பத்தாரிடம் இருந்தது கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், கின்னஸ் சாதனை படைக்கும் வகையில், இருபத்திநான்கு மணி நேரமும் கால் கதைப்பதாக அறிய வந்தது! எப்போதும் சும்மாவே இருக்கும் கே.கே ஐ பாராட்டி அண்மையில் ஒஸ்கார் விருது வழங்கப்பட்டது! அந்த விருதை பெற்று கொண்டு உரை ஆற்றிய கே.கே வானத்தை அண்ணாந்து பார்த்து " எல்லாப் புகழும் இறைவநிட்கே" என்று KOORINAAR! இதனால் உலகம் முழுவதிலும் தமிழின் புகழ் கோடி கட்டி பறக்கிறது! இந்த விருதை பெற்ற கே.கே , நியூ யார்க் டைம்ஸ் இற்கு அளித்த பேட்டியில் " சும்மா இருப்பது எவளவு கடினம் என்பது எனக்கு மட்டுமே தெரியும்!" என்றார்!.A.C.C.A. எக்ஸாம் எடுக்காது பெற்றோரை ஏமாற்றி திரியும் இவன், எப்போது அடுத்த எக்ஸாம் என்று கேட்டதற்கு" ஜனவரி, பிப்ரவரி,.... டிசம்பர்' என்று அணைத்து மாதங்களையும் கூறியஇவன், இதற்கு மேலும் கூறுவதற்கு மாதமே இல்லாத படியால் நிறுத்திவிட்டான்! சரி இவனின் தினசரி நேர அட்டவனையை பார்ப்போமா?
அதிகாலை நித்திரை விடு எழுவது ஒன்பதரை மணிக்கு! பின்னர் நேரடியாக டி.வீ இல் டி.வீ.டி இல் கண்டி வரை கேட்கும் அளவிற்கு கதறக் கதற பாட்டு கேட்பான்! அதில் ஒரு கிளுகிளுப்பு அவனிக்கு! அம்மா பேசும் மட்டும் கேட்டு விட்டு , பின்னர் முகம் கழுவாமல், பல் துலக்காமல் தண்டச்சோறு உண்பான்! இது முடிய , நேரடியாக முழு உற்சாகத்துடன் கம்பியூட்டர் நோக்கி சென்று, பேஸ்புக் இல் அமர்ந்தது தன்னை போல வெட்டியானவர்களுடன் சங்கத்து அரட்டையை ஆரம்பிப்பான்! இடையில் அகப்படும், அக்ஷய் நாதன் ஐ வம்பிற்கு இழுத்து பன்னிரண்டு மணி வரை காலம் கடத்துவான்! பின்னர் மட்டவர்களின் புரோபயில்களை கிண்டி கிளறி, அங்கே தன தடயங்களை பொரித்து விட்டு, பின்னர் பாம்வில்லே ஐ மூர்க்கத்தனமாக மூச்சு திணறத் திணற விளையாடுவான்! பின்னர் மறுபடி மத்யம் உண்டு விட்டு , மறுபடி,பேஸ்புக், பின் டின்னர், பின் மறுபடி பேஸ்புக்! இவை அனைத்தும் முடிந்த்த பின்னர் வெற்றிகரமாக தனது நாளை களித்த மன நிறைவுடன் , ஒரு வித வெற்றி களிப்புடன் ஒரு அபாரமான தூக்கம்! சக்சஸ் என்று கூறியபடி! இது தான் வெட்டி பயல்களின் வாழ்க்கை ! இதை வைத்து , தேசிய விருது பெரும் நோக்கில் இயக்குனர் பாலா படம் ஒன்று தயாரிக்கின்றார்! இதில் நடிக்கும் படி கேட்டதற்கு," நான் இப்போது சும்மாவே இருப்பதால் இதில் நடிக்க நேரம் இல்லை '"என்று கூறி இருக்கின்றன்!



எனவே குட்டிக்கருப்பனின் ஆண், பெண்ண நண்பர்களே! தயவு பண்ணி உங்கள் லவ் பிரைச்சினைகள், இன்னோரன்ன பிரைச்சினைகளிட்காக கே.கே ஐ இழுத்து அவனின் வாழ்கையை வீணடிக்காது, அடிக்கடி கால் பண்ணி படிக்க விடாமல் குழப்பாமல் இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்! பதிலாகA.C.C.A எக்ஸாம் எடுக்க அட்வைஸ் பண்ணி உங்கள் நண்பனை உட்சாகப்படுத்துங்கள்! பேஸ்புக் இல் அரட்டை அடிப்பதை நிருத்துன்க்கள்!

2 கருத்துகள்:

மாயாவி சொன்னது…

குறுமுனி எப்பயடா குட்டிக்கறுப்பன் ஆனது??????????
excellent da machchaan

suvai சொன்னது…

porruththukkollavum! innum sila nodikalil ummai patriya thakavalkal release itku kaaththirukinrana!

கருத்துரையிடுக