வெள்ளி, 19 ஜூலை, 2013

தேனிதழே !!!!!!!!




பாலோடு தேன் சேர்த்து பொழுதன்று வந்தாய் 
பாவையே உன் பூவிதழால் பழமொன்றும் தந்தாய் 
மலரோடு மணம் சேர்த்து மயக்கினாயே மெல்ல 
மல்லிகையே மன்னவன் நான் முகமலர்ந்து நின்றேன் -உன் 

படர் கூந்தல் மீதே நான் படகாக உலவ 
பகலென்ன இரவென்ன பொழுதொன்றும்  போதா
மோகத்தில் மலருன்னை மெலிதாக வருட 
மேகம் போல் கடந்தாயே மெதுவாக என்னை 

கயல்விழியே உன் கருவிழியால் எனைக் கயிறாகத் திரித்தாய் 
கட்டுடலும் கலங்கிடவே கலகங்கள் செய்தாய் -உன் 
கொடியிடையில் தடுமாறி தரை தட்டி நின்றேன் -உன் 
கொழுசாலே அசை போட்டு திசை காட்டி கலைத்தாய் 

திசைமாறி தடம் மாறி உன் முகம் நோக்கி வந்தேன் 
தேனிதழால்  தீண்டியெனை தேன் பருக வைத்தாய் 
நிலவே உன் முகமீது தலை சாய்த்து உறங்க 
நெடுங்காலம்  போதாதென நொந்தே நான் சாய்ந்தேன் !!!!!!!