செவ்வாய், 30 மார்ச், 2010

மாட்டு மாமாவிற்கு ஆப்பு!

அண்மையில் பலர் பற்றிய தகவல்களை இங்கே நாக்கை தொங்கப்போட்டபடி பார்த்துக்கொண்டு காலம் போக்கும் மாட்டை பற்றி எழுதி தள்ளுமாறு எமக்கு கிடைத்த தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்த பதிவு ஆக்கப்படுகிறது!
மாட்டு மாமாவிற்கு இந்த பட்டம் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பது பற்றிய தீவிர ஆராய்ச்சியில் எமது, தொல்பொருள் நிபுணர்கள் குழு, பழைய சென்.ஜோன்ஸ் கல்லூரியின் சிதைந்த்த் தரம் நான்கு, ஐந்து வகுப்பு அறைகளை, தோண்டி அகழ்வாராய்ச்சியில் ஈடு பட்ட போதும் , பயன் தரும் படியான எந்த தடயங்களும் கிடைக்கவில்லை! எனினும், பழைய மாணவர்களின் வாய் மொழி பாரம்பரியங்களின் படி, அப்போதைய மாணாக்கர்களில், உடல் அமைப்பில் பாரிய அளவில் காணப்பட்டமையினாலும், இடைவேளைகளில் டிபன் பாக்ஸ் இல் புண்ணாக்கை கொண்டு வந்து உண்பதாலேயுமே இந்த பெயர் பழக்கமாகியதாகவும், மாமா என்ற சொல் எப்படி இணைக்கப்பட்டது என்பது பற்றி தமக்கு தெரியவில்லை என்றும் கூறுகின்றனர்!
இது தவிர, சென்.ஜோன்ஸ் வரலாற்றில் எமது பிரிவில் முதல் முறையாக மூக்குக் கண்ணாடி அணிந்த பெருமையும் மாட்டு மாமாவையே சாரும்! இதனை பாராட்டி அப்போதைய அசம்பிளியில் கவுரவ டாக்டர் பட்டமும், மாட்டு மாமா பட்டமும் வழங்கி கவுரவிக்கப்பட்டார்! அப்போது தமிழ் படிப்பித்த ரகுநாதன் சார் , அதிகாலையில் எழுந்து உரத்த குரலில் வாசித்தால் குரல் வளம் நன்றாக வரும் என்று கூறியதை கேடு, ஒரு நப்பாசையில்,அதிகாலை எழுந்து உரக்க வாசித்த பொது , அவ்வேளை அவ்வழியால் சென்ற ஆசிரியர் அவர்கள், ஏதோ எருமை மாடு ஒன்று அவிட்டுக்கிட்டு , முக்கார‌மிட்டபடி ஓடி வருவதாக எண்ணி ஓட்டம் பிடித்தமையும் வரலாறாக பதியப்பட்டுள்ளன! திருக்குறள்,அது இது என்று, பரிசில்களை, தட்டி செல்லும், மாடு, ஒரு முறை, பாட்டுப் பாடுவதிலும் பரிசு பெற வேண்டும் என்ற நோக்கில், மேடை ஏறி , பாடுவதாக எண்ணி, முக்கார‌மிட்டதில், அப்போதைய ஹண்டி நூலகம் இடிந்து வீழ்ந்த்ததும், போட்டி நடுவராக கலந்து கொண்ட இந்துமதி மிஸ் மயங்கி வீழ்ந்ததும் இவருடைய வாழ்நாள் சாதனைகள்! தொம்சன் கவுசில், எந்த போட்டியிலும் கலந்து கொள்ளாமல், வெட்டியாக இருந்ததால், கோபம் கொண்ட தவராஜா மிஸ் "எருமை மாடு! போய் கயிறு இழுவையாவது செய் என்று " திட்டி கயிறு இழுக்க அனுப்பியதும், கயிற்றை பிடித்தது தான் தாமதம், செக்கு இழுப்பது,நினைவிற்கு வர, கயிற்றை பிடித்தபடி, கிரவுண்ட்ஸ்ஐ சுற்றி சுற்றி இழுத்ததும் , அதில் இருந்து இவரிற்கு "செக்கு மாடு" எனும் பெயரும் இணைந்து கொண்டது! தரம் ஐந்திலேயே ரிபோர்ட் இல் கள்ள கையோப்பம் வைத்து பிடிபட்டு, எமது பிரிவில் முதல் முறை கள்ள சயின் வைத்தவன் என்ற பெருமையையும் தன்னகத்தே கொண்டு உலா வருகிறார்! பின்னர் வளர்ந்தது, இங்கிலிஸ் ஜூனியன் பிரசிடன்ட் ஆக வந்து ஊர் உலகத்தில,இருக்கிற பெண்கள் பாடசாலய்களிட்கு எல்லாம் ஆங்கில தினத்திற்கு,கோபி, அஜந்துடன் சென்று சிறப்பித்து உள்ளார்! ஒரு முறை, நித்தியானந்த மக வித்தியாலயத்துக்கு சென்ற பொது, கலவரமடிந்த மாணவர்கள் " எருமை மாடு விழா மண்டபத்துக்குள் நுழைந்து விட்டது" என்று கால் தெறிக்க ஓடி இருக்கிறார்கள்! பின்னர் ஒருவாறு சுதாகரித்துக்கொண்ட, அதிபர் " இது மாடு அல்ல! மனிதன் தான்! பயப்பட வேண்டாம்! என்று கூறியபோதும், ஒரு வித பயத்துடன், விழா நடந்து முடிந்தது!
ஒரு சமயம் காதல் தோல்வியில் பாதிக்கப்பட்டு " பிரம்மச்சாரியாக போவதாக "ஏதோ ஒரு ஆத்மீக அமைப்பில் சேர்ந்தது ஸ்கூல் பிரிபக்ட் போல பட்டி அணிந்து சயன்ஸ் கால் இற்கு சென்று, இங்கு நான் தான் பிரிபக்ட் என்று பீலா விட, அருளரிடம் காதினை பொத்தி வாங்கி இருக்கிறார்! தற்போது கொழும்பில் மேய்ந்து திரியும் இவர் பற்றிய மேலதிக தகவல்கள் விரைவில்!!!!!!!!!!!

1 கருத்து:

maravan சொன்னது…

nithiyanantha maha vidyalayam?????????????????????
nithiyananthar paditha schoola???????????????

கருத்துரையிடுக