சனி, 20 அக்டோபர், 2012

மார்வன் அத்தப்பத்து!!!!!

 சிலர் அருகிலிருக்கும் போது அவர்களின் அருமை புரியாது. அவர்கள் இல்லாதபோது அல்லது நம்மிலிருந்து அன்னியமாகும் போது தான் அவர்களின் அருமை , பலம் புரியும். அவர்களது தனித்துவமும் அப்போதே புரியத்தொடங்கும். 

இலங்கை கிரிக்கட் ரசிகர்கள் சனத்தை தலை மேல் தூக்கி கொண்டாடிக்கொண்டிருந்தபோது சத்தமே இல்லாமல் சாதித்து பொறுமையுடனும் அனுபவ முதிர்ச்சியுடனும் பக்குவப்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கையின் தூணாக ஆணிவேராக தாங்கியவர் தான் மார்வன் அத்தப்பத்து.  அவர் ஆடியகாலத்தில் அவரை மந்தமான ஆட்டக்காரர் என்றும், சிக்சர் அடிக்கத்தேரியாதவர் என்றும் மிகுந்த பொறுமையுடன் விளயாடியதாலும் பலர் அவரை ரசித்துப்ப் பார்த்ததில்லை.
ஆனால் இலங்கையின் அத்தனை முக்கிய வெற்றிகளிலும் முக்கிய அல்லது முளுப்பங்கையும்வழங்கியவர் இந்த அத்தப்பத்துவே.
இப்போதும் அவர் விளையாடிய காலத்துப் போட்டிகளை பார்த்தால் ஸ்கோர் பாட் சமரியில் இவரின் பெயர் நிச்சயம் இல்லாமல் இருக்காது. தான் விளையாடிய அநேகமான போட்டிகளில் கணிசமான ஓட்ட எண்ணிக்கையை எடுக்கத்தவறாத ஒரே இலங்கை மட்டையாளர் அத்தப்பத்துவே. 

கிரிக்கட் வரலாற்றில் தோன்றிய மிக குறைந்த "timing, perfect ,most technically correct batsmen  களில் இவரும் ஒருவர் என இனம்கானப்படுகிறார். இவர் சிக்சர் அடித்து நான் பார்த்தது ஒரு சில தடவையே எனினும் இவரது பவுண்டரிகள் அடிக்கும் காட்சிகள் இன்றும் மனதில் அப்படியே நிழலாடுகின்றன.  மின்னலென பறந்து வருகின்ற புயல் வேகப் பந்துகளையும் சளைக்காமல் பதறாமல் முழங்காலை முன்நோக்கி நகர்த்தி அடிக்கும் டிரைவ் இருக்கே ,,, அதை காணக் கண் கோடி தேவை. அவ்வளவு smartness, stylish ஷோட்கள். அடித்த மாத்திரத்திலேயே புயல் வேகத்துடன் பவுண்டரி எல்லையை தாண்டும் அழகு, எவ்வித பவுன்சர்களும் இன்றி தரையுடனே நிலத்தை தடவிக்கொன்று சீரிச்ச்செல்லும் வேகம் என அப்படியான டிரைவுகளை வேறு எந்த துடுப்பாட்டவீரர்களிடமும் கண்டதேயில்லை.  அவர் drive  அடிக்கும் போது அவருடைய அந்த பாடிலாங்குவேஜ்  தனித்துவமானது.




இலங்கையணி ஆடிய போட்டிகள் அநேகமானவற்றில் அண்ணன் ஜெயசூரிய வந்த வேகத்திலே சிலிப் கட்சிலோ அல்லது அருகிலுள்ள பீல்டர்களிடமோ பந்தை கொடுத்துவிட்டு கர்ணன் போல balcony சென்றுவிடுவார். பின்னே வருபவர்களும் வரிசையாக நடந்துகொண்டிருப்பார். ஒரு பக்கம் விக்கட் விழுந்து கொண்டிருக்க பொறுமையுடன் எதிரிலே மலைபோல நிலைத்து பந்துகளை பொறுமையுடன் எண்ணிக்கொண்டிருக்கும் அத்தப்பத்து பவுண்டரிகளிட்கு விரட்டவேண்டிய சரியான பந்துக்களை கணித்து தக்க நேரங்களில் அது பவர்பிளே இல்லாத போதும் விளாசிவிடுவார். பின்னர் மீண்டும் சிங்கிள்ஸ் டபிள்ஸ்  நோ-ரன்  பின் மீண்டும் பவுண்டரிகள் என சீராக ஓட்ட எண்ணிக்கையை தூக்கிவிடுவார். இனின்க்ஸ் முடிவில் இலங்கை அணி எப்படியும் 220/240 கு மேல் எடுத்துவிடும். 
அப்போதெல்லாம் எதிரணிக்கு அது ஒரு பெரிய இலக்கு. முரளி, சமிந்த , சனத் ஆகியோரை எதிர்கொள்வதே ஒரு பெரும் சவால். அப்படி எதிர்கொண்டாலும் பந்துக்களை பவுண்டரிகளிட்கு அனுப்ப முடியாது. 
அப்போதெலாம் கலத்தடுப்பென்றாலே இலங்கை தான் .(தென்னாபிரிக்காவை  விடுங்கள்).  இப்படிதான் தூண் போல நின்று காத்தவர் . இலங்கையணி துரத்தியாடுகிறது என்றாலும் ஓட்டவிகிததுக்கேட்ப விளையாடுவார்.  

இவரது பெரிய இனின்க்ச்களில் பவுண்டரிகளிட்கு பஞ்சம்  இருக்காது. சத்தமே இல்லாமல் பத்து பதினைந்து பவுண்டரிகளை இனின்க்ஸ் முழுக்க அடித்துவிடுவார். எப்போது அடித்தார் என்றே பலருக்கும் தெரியாது.

இவர் விளையாடிய காலத்தில் எதோ ஒரு கட்டுரை படித்த நினைவு. அப்போது பொண்டிங்கிடம்(?) நீங்கள் சனத்தை எப்படி எதிர்கொள்ளபோகிரீர்கள் என்று கேட்பார்கள், அதற்கு அவர் " நாங்கள் விரைவாக அத்தப்பத்துவை வெளியேற்றிவிட்டால் இனின்க்ஸ் முழுக்க ஆதிக்கம் செலுத்தமுடியும்  " என்று கூறியது நினைவிருக்கிறது . 

இவரது 2003 உலககிண்ண தென்னாபிரிக்காவிட்கேதிரான ஆட்டம், முக்கியமான ஒரு சுப்பர் சிக்ஸில் சிம்பாப்வே உடனான ஆட்டம் என பல்வேறு மிக மிக சிறந்த இனிக்ச்கள் உள்ளன. அதுவும் தென்னாபிரிக்காவிட்கேதிர ாக 18 பவுண்டரிகள்!! ஒவ்வொன்றும் அழகான நேர்த்தியான ஷோட்கள்.

இவர் இருந்த போது மஹேல, சங்கா எனபலரும் இருந்தாலும் அப்போதெல்லாம் இவர்கள் பெரிதாக பிரகாசித்ததாக நினைவில்லை. இலங்கையநியுன் ஓட்ட இயந்திரமாக அத்தபத்துவே இருந்தார். 

இலங்கையணி வீரர்கள் 30  சராசரி வைத்திருப்பது இப்போது கூட அபூரவமாக இருக்கின்ற போது இவர் அப்போதே அண்ணளவாக 38 சராசரி வைத்திருந்தார்.  இவர் அதிரடியாக ஆடி தள்ளிய போட்டிகளும் உள்ளன. 



டெஸ்டில் தான் இவர் எப்படிப்பட்ட வீரர் என்பதை அறிந்துகொள்ளலாம். 5 இரட்டைச்சதன்களை விளாசியுள்ளார். இவ்வளத்திட்கும் இவர் தனது முதலாவது அரைச்சதத்தை 17 வது  innigs பெற்றார். முதல் 6 இனின்க்ச்களில் 5 டக் அவுட்.  இருந்தும் சராசரி அண்ணளவாக 40 .   இவர் களத்தில் இருந்துவிட்டால் அந்த எமனே வந்தாலும் ஒன்றும் பண்ணமுடியாது. எதிரணியை வேருப்பெற்றிவிடுவார். எனினும் டிராவிட் போல லட்சுமணன் போல பிட்சில் பாய் விரித்து படுத்து விடமாட்டார். அடிக்கடி தனது ஸ்டைலிஷான டிரைவ் ஷோட்கள் மூலம் பவுண்டரிகளையும் விலாசிகொண்டிருப்பதால் ரசிக்கக்கூடியதாக இருக்கும்.

சங்ககார என பலபேர் இப்போது drive shotsஅடித்தாலும் அத்தப்பத்து அடிக்கும் விதமே தனித்துவமானது. அவர் டிரைவ்  நிச்சயம் பவுண்டரிதான். ஒரு இனின்க்சில் நீண்ட நேரம்  களத்தில் உள்ளாரெனில் வெற்றி நிச்சயம் இலங்கைக்கு என உறுதியாக கூறிவிடலாம். சிலவேளைகளில் ஏனையவீரர்கள் சொதப்பி தோற்றதுண்டு.


இப்படிப்பட்டதொரு வீரரை இனி காணமுடியாது என்பது தான் உண்மை. அப்போதெல்லாம் சலிப்பெற்றிய இவரது இனின்க்ஸ்  இப்போது யூடியூப்பில் பார்க்கும் போது தான் எவ்வளவு அருமையானவை என புரிகின்றன .   இப்போது ஆரம்பத்தில் சொன்ன வசனங்கள் நினைவிற்கு வருகின்றன.  
"
சிலர் அருகிலிருக்கும் போது அவர்களின் அருமை புரியாது. அவர்கள் இல்லாதபோது அல்லது நம்மிலிருந்து அன்னியமாகும் போது தான் அவர்களின் அருமை பலம் புரியும். அவர்களது தனித்துவமும் அப்போதே புரியத்தொடங்கும். ""

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக