வியாழன், 1 ஜூலை, 2010

காதலிகள் தேவை!



2008 A\L சென் ஜோண்ஸ் மாணவர்கள் பலர் கடுமையாக‌ முயன்றும் காதலிகள் கிடைக்காமையினால் மிகவும் மனவருத்தத்துடன் தமது வாழ்க்கையை கழித்து வருவது நமது குழுவினரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது! இதேவேளை சிலர்(?) எப்படியும் இவ் வருட இறுதிக்குள் அட்லீஸ்ட் ஒரு கேர்ள் பிரண்ட்டையாவது பிடிப்பதாக நண்பர்களிடம் சவால் விட்டுள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன!

இப்படியாக காதலிகள் இல்லாமல் (நாம் உட்பட) சுற்றித்திரியும் நாம் அனைவரும் இணைந்து சங்கம் ஒன்றை ஆரம்பித்து இருந்தமை அனைவரிற்கும் தெரிந்ததே! இவ் அமைப்பில் நரேன் குரூப்பினரையும் இணைத்துக் கொள்ள நாம் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி அளிக்கவில்லை! இதற்கு காரணம் அவர்களில் சிலர் ஒரு சப்பை பிகரையாவது வைத்துள்ளதாக அறிய வருகிறது!
ஆயினும் அவர்களில் சிலர் இவ் அமைப்பில் இணைந்து உள்ளனர்! இது பற்றி அண்மைய கூட்டத்தில் அலசி ஆராயப்பட்டது!
அதில் பின்வரும் விடயங்கள் கருத்தில் எடுக்கப்பட்டன!

1) இப்படி காதலிகள் இல்லாமல் இருப்பது இவர்களின் நண்பர்கள் வட்டாரத்தில் இவர்களிற்கு(நாம் உட்பட) ஒரு அவப் பெயரை ஏற்படுத்துகிறது!

2)இப்படி காதலிகளுக்காக‌ காத்திருந்து காத்திருந்து 78% இற்கும் மேற்பட்டவர்களிற்கு வழுக்கை விழத் தொடங்கிவிட்டது!

3) இவர்களில் பலர், தமக்கு லவ் மூடு ஸ்டார்ட் ஆகிடுச்சு என்று காட்டிக்கொள்வதற்காக‌ , அடிக்கடி "பேஸ் புக்" இல் "லைப் பாக்ஸ்" ஐ ஒப்பின் பண்ணி "Kiss", "Romantic", "Marriage" இப்படி அவுட்-ஸ்டான்டின்க் பெறுபேறுகளை ஈட்டி வருகின்றனர்!

4) அடிக்கடி பேஸ்புக்கிலேயே தவமாய் தவமிருந்து "Friend requestகளை பெண்களை நோக்கி எறிவதும், அவர்கள் "ignore" பண்ணியதும் மனம் உடைந்து விடுவதும், தற்செயலாக "Accept" பண்ணப்ப்படுமிடத்தில், அதை ஒரு பெரிய விழாவாகவே எடுத்து நண்பர்களிட்கு விருந்து வைப்பதும் இவர்களின் வாடிக்கையாகி விட்டது!

5) தாம் லவ் பண்ணுவதாக காட்டிக்கொள்வதற்காக‌ எங்காவது இருக்கும் காதல் கவிதைகளை ஆட்டையப் போட்டு பப்ளிஷ் பண்ணுவதும், ஒரே பீலிங் போல ஓவர் பில்ட்-அப் காட்டுவதும் வழக்கமாய் போய் விட்டது!

6) இதேவேளை நண்பர்கள் முன்னால் "456" இற்கு டயல் செய்து யாரோ ஒரு பெண்ணிடம் கதைப்பது போல சிரித்து சிரித்து கதைப்பதும் , கேட்டால், "பெர்சனல் " என்று கூறுவதுமாக இவர்களின் நிலை கவலைக்கிடமாகி விட்டது!
எனவே இப் பிரச்சினைகளிற்கு தீர்வு காண்பதற்காக‌ உங்கள் அறிவுரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன!!!!
உங்கள் கருத்துக்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்!!!!!!!!!!!!!

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

சில நண்பர்கள் ஏராளமான கேர்ள் ஃபிரண்ட்ஸ் வைத்திருக்கிறார்கள், அதேவேளை சில நல்ல நண்பர்கள் ஒரு கேர்ள் ஃபிரண்ட் கூட இல்லாமல் வாடுகிறார்கள். ஐயகோ! என்ன கொடுமை இது?

Unknown சொன்னது…

//இதேவேளை சிலர்(?) எப்படியும் இவ் வருட இறுதிக்குள் அட்லீஸ்ட் ஒரு கேர்ள் பிரண்ட்டையாவது பிடிப்பதாக நண்பர்களிடம் சவால் விட்டுள்ளதாகவும்///

அந்த நண்பருக்கு கூடிய சீக்கிரமே ஒரு நல்ல கேர்ள் ஃபிரண்ட் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

Romesh சொன்னது…

//இப்படி காதலிகளுக்காக‌ காத்திருந்து காத்திருந்து 78% இற்கும் மேற்பட்டவர்களிற்கு வழுக்கை விழத் தொடங்கிவிட்டது!///

கவலைப் பட வேண்டாம் நண்பர் அஜந்தை அணுகவும் அவர் முடி நடுவதில் PHD முடித்துள்ளார்

கருத்துரையிடுக