வியாழன், 5 ஜூலை, 2012

நட்பிலும் வலிமையான காதல்






இந்த உலகையே அன்பு என்பதே அடக்கி ஆண்டு வருகிறது. அன்பு என்றவுடன் நினைவிற்கு வருவது நட்பு, காதல் என்ற அந்த இரண்டு சொற்களே! உண்மையிலேயே சிறந்தது காதலே!!!! நட்பு என்பது தற்காலிகமானது, தத்தமது தேவைகளினாலேயே ஒருவர் ஒருவரிற்கு நண்பனாக உள்ளனர்!!!! காதல் அப்படியானது அல்ல!!!! அது நிரந்தரமானது! ஆயுள் வரைக்குமானது!!!!! அன்பு சார்ந்தது.  உண்மையானது!


உங்கள் வாழ்கையில் எத்தனை நண்பர்களை சந்தித்திருப்பீர்கள்? நீங்கள் சந்தித்த அத்தனை நண்பர்களும் இன்று வரை உங்களிற்கு நண்பர்களாக உள்ளனரா? நிச்சயமாக இல்லை!!!  தரம் ஒன்றில்  உங்களிற்கு உயிர் நண்பனாக் இருந்தவர் தரம் நான்கில் வேறு ஒருவரின் உயிர் தோழனாக இருப்பார். உங்களிற்கு வேறு ஒருவர் உயிர்  தோழனாக க் இருப்பார்.
நீங்கள் டிவிசன் மாற மாற உங்கள் வகுப்பில் உள்ளவரே உங்கள் உயிர்  தோழனாக  இருப்பார். அதாவது உங்களிற்கு தேவை படுகின்ற, நீங்கள் அதிகமாக பழகும் ஒருவரே உங்களின் உயிர் தோழனாக இருப்பார். இது காலம் மாற மாற மாறிக்கொண்டு இருக்கும்!  நீங்கள் உயர் தரம் படிக்கும் போது ஒவொருவரும் ஒவ்வொரு துறையை தெரிவு செய்வர். உங்கள் நண்பர் வேறு ஒரு துறையை தெரிவு செய்வர். இப்போது ஒவ்வொருவரும் தத்தமது துறையில் உள்ளவர்களுடனே அதிகம் பழக வேண்டும்,  அவரே உங்களிற்கு அதிகம் தேவை படுவார்!! எனவே பழைய நண்பருடன் பழகுவது படிப்டையாக் குறைந்து அவர் உங்களிற்கு சாதாரண நண்பராகி விடுவார். அடுத்த மூன்று  வருடத்திற்கு  உங்களிற்கு உங்கள் வகுப்பில் உள்ள/ உங்கள் துறையில் உள்ளவரே உங்களிற்கு பெஸ்ட் பிரண்ட்.

அதுவும் தற்காலிகமானது! பாடசாலை வாழ்க்கை முடிந்தவுடன் ஒவொருவரும்  தத்தமது வாழ்கையை தீர்மானித்து கொள்ள வேண்டிய நேரம்! சிலர் பல்கலை செல்வர், சிலர் வெளிநாடு சிலர் வேறு வேறு துறையை தெரிவு செய்வர். பல்கலை சென்றவர்களிட்கு பல்கலையில் உள்ளவர்களே நன்ப்ரகளாக இருப்பார், உயர் கல்வி சென்றவர்கள், வெளிநாடு சென்றவர்களுக்கும் இப்படியே!! இதுவே உண்மையான நட்பு என்று நினைப்பார்! இல்லை!! அதுவும் மிஞ்சி மிஞ்சி போனால் நான்கு வருடங்களே!!!! get-together என்று கண்ணீருடன் விடை பெறுவார்!  இந்த கண்ணீர் சில நாட்கள் மட்டுமே! பின்னர்  வேலைக்கு செல்வீர்கள் அங்கு உள்ளவர்களுடனே அதிக நேரத்தை செலவு செய்வீர்கள், பழகுவீர்கள். பழைய நண்பர்களுடன் பழகுவதோ, அவர்களை காண்பதோ  அரிதாகி விடும். இப்போது  உங்களிற்கு புதிய நட்பு! இப்படியே காலம் மாற மாற நட்பும் மாறும்.  நட்பு  தற்காலிகமானது!

ஒரு சிறு உதாராணம், எனக்கு பாடசாலை காலத்தில் ஒரு நண்பன் இருந்தான். ஒரு சிறு பிரச்சினை பெரிதாகி பெரும் பிரச்சினையாகி விட்டது. அதன் பின்னர் கதைப்பதே இல்லை. பாடசாலை முடித்து உயர்  கல்விக்காக தலைநகர் வந்து தனியாக  இருந்தேன். நண்பரும் அப்படி தான். திரிவதற்கு வேறு எவரும் இல்லை. ஒரு நாள் அவனிடம் இருந்து 
call  வந்தது. நம்பவே முடியவில்லை!  அதன் பின்னர் உயர் தர பரீட்சை முடிவு வரும் வரை ஒன்றாக திரிந்தோம்!  பின் அவன் பல்கலை சென்று விட்டான், நானும் வேறு துறைக்கு சென்று விட்டேன்!!!! அதன் பின்னர் அவனை காண்பதே அரிதாகி விட்டது!!! அவனிற்கு புது நண்பர்கள்!! எனக்கும் புது நண்பர்கள்!  எமக்கு நட்பு தேவைபட வில்லை!!! ஆக நட்பு என்பது தற்காலிகமானது! தேவை, சூழல் சார்ந்து வருவது. அது தற்காலிக ஆறுதல் போன்றது!

                                               பெண்- பெண் நட்பு 

ஆண்களின் நட்பை விடுங்கள் அது வெளிப்படையானது. பெண்கள்இட்கிடையான் நட்பு அப்படியல்ல! முழுக்க முழுக்க சுயநலம், போட்டி , பொறாமை நிறைந்தது . என்னதான் நன்றாக பழகினாலும் தம்மையே முன்னிலை படுத்துவர்!  தமிடையே நன்றாக கதைத்து விட்டு பிறரிடம் தம் நண்பியை பற்றியே பிழையாக பேசுவர்.

                                                  போலியானது ஆண் -பெண் நட்பு 

எனக்கு social, cultural என்பதில் எல்லாம் நம்பிக்கையே கிடையாது. எனக்கு தெரிந்தது எல்லாம் யதார்த்தம் மட்டுமே. என்னை பொறுத்த வரை ஆண் பெண் நட்பு ஆபத்தானது.
ஆண்கள்  பெண்களிற்கு எதையும்  வழிந்து வழிந்து செய்வர்! எல்லாம் ஒரு உள் நோக்கத்துடனே! அவர்களிற்கு உண்மையில் அன்போ அக்கறையோ கிடையாது. 
எனக்கு பல நண்பர்கள் உள்ளனர் அவர்களிற்கு பல பெண் நண்பர்கள் உள்ளனர். அவர்களிற்காக பல உதவிகள் செய்வர். அந்த பெண்களும் எனக்கு இப்படி ஒரு நண்பனா என பெருமைப் ப டுவர். இதனால் அந்த பெண்ணிற்கும் காதலநிட்கும் பிரைச்சினை ஏற்பட்டு பிரிந்து விட்டனர். ஆண் நண்பர்களோ ஆபத்தானவர்கள். அவன் எம்மிடம் கதைக்கும் போது அந்த பெண்ணை பற்றி மிகவும் தரக்குறைவாக பேசுவான். அவனின் நோக்கம் என்ன என்பது சொல்ல வேண்டியது இல்லை!  இப்போது எங்களிற்கு அந்த பெண்ணை பற்றி பெரிய அபிபிராயம் எல்லாம் இல்லை! அவளின் பெயர் ஆண்களிடத்தில் நன்றாக இல்லை!! ஆகவே ஆண் பெண் நட்பு ஆபத்தானது. அது திரைப்படங்களில் மாத்திரமே சாத்தியமானது!

காதலோ நிரந்தரமானது!!! உண்மையானது!! ஆழமானது!! என்ன தான் சண்டை சச்சரவுகள் வந்தாலும் உண்மையான அன்பு, அக்கறை  காதலிட்கே உள்ளது! பாடசாலை காலத்திலோ, உயர் கல்வியிலோ பின்னரோ ஆயுள் வரைக்கும் நிரந்தரமானது காதல் மட்டுமே(ஒரு சில கழற்றி விடுகின்ற ஜோடிகளை தவிர). நட்பு என்பது உங்களுடன் மிக சிறிய  தூரம்   வரை பயணித்து விட்டு தமக்குரிய பாதை வந்தவுடன் அவ்வழியே பிரிந்து சென்று விடும்!!! காதலோ உங்கள் பாதை முழுதும் எந்த இடரான பாதையாயினும் உங்களுடனே ஆயுள் வரைக்கும் சமாந்தரமாக பயணிக்கும்! ஆகவே நட்புக்காக காதலை இழக்காதீர்கள்!!!

3 கருத்துகள்:

Romesh சொன்னது…

நீங்கள் காதலிற்காக நட்பை கேவலபடுத்திவிட்டீர்கள் நண்பா!!! ஆனாலும் உன்னிடமிருந்து இப்படி ஒரு கருத்து நான் எதிர்பாத்ததுதான்!!! காதலிற்காக நட்பை புறந்தள்ளி விடலாம் என்ற கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்!!! உங்கள் காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!! நீங்கள் நட்பை மதிக்காவிட்டாலும் உண்மை நட்பு என்றென் உங்களை கைவிடாது... உங்கள் யதார்த்த பார்வைக்கு காலம் பதில் சொல்லும்... வாழ்க வளமுடன்


(பிற்குறிப்பு- இந்த கருத்துக்காக என் நட்பை முறித்து கொள்ள சொன்னால் தயவு செய்து செய்யுங்கள் ஏனெனில் உங்கள் கருத்தின் படி நட்பு தற்காலிகமானது)

Unknown சொன்னது…

என்னை பொறுத்த வரையில்,காதல்(வாழ்க்கைத்துணை) என்று முடிவாகிவிட்ட பின்னர்,நட்புகளை விட வாழ்க்கை துணைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுதல் அவசியம்.இதை அந்த நண்பர்கள்,தங்களுக்கு அத்தகைய சூழ்நிலை வரும் போது புரிந்து கொள்வார்கள்.

suvai சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

கருத்துரையிடுக